மஹிந்தவை ‘பிரதமர்’ எனக் குறிப்பிட்டதன் மூலம், நீதிமன்றை அவமதித்ததா ‘தி ஐலன்ட்’?

🕔 December 5, 2018

ஹிந்த ராஜபக்ஷவை ‘பிரதமர்’ எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிடடதன் மூலம் ‘தி ஐலன்ட்’ பத்திரிகை, நீதிமன்ற அவமதிப்பினை மேற்கொள்கிறா என்கிற கேள்வியுடன், ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று முன்தினம் (03ஆம் திகதி) மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை வகிப்பதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு ராச்சியத்தின் தேசிய தினத்தையொட்டி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்றுக்கு, அந்தப் பத்திரிகை எழுதியுள்ள விளக்கத்தில், “சபாநாயகர் கருஜயசூரியவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கைகுலுக்கிக் கொள்கின்றனர்” என்று, குறிப்பிட்டிருந்தது.

இது நீதிமன்ற அவமதிப்பாக அமையுமா என்கிற கேள்வியுடன், மேற்படி ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்