வித்தியா விவகாரம்; கல்முனை மாநகரசபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்

🕔 May 28, 2015

KMC - 01– எம்.வை.அமீர் –

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து, கல்முனை மாநகரசபையில் பிரேரணையொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு – சபை முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, மாணவி வித்தியா மீதான வன்புணர்வு மற்றும் வித்தியாவின் படுகொலை போன்றவற்றினைக் கண்டித்தும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாருக்கு அனுதாபம் தெரிவித்தும் – கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏ. அமிர்தலிங்கம், சபையில் பிரேரணையொன்றினைச் சமர்ப்பித்து உரையாற்றினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் – குறித்த நிகழ்வை மிகவும் வன்மையாகக் கண்டித்ததோடு,  வித்தியாவின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு  நன்றிகளையும் தனதுரையில் தெரிவித்தார்.

இதனையடுத்து, சபை முதல்வர் நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் – வித்யாவின் படுகொலையைக் கண்டித்து உரையாற்றியதோடு,  வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து, சபையில் சமர்பிக்கப்பட்ட பிரரணையினை ஏகமனதாக அங்கீகரித்தனர். KMC - 02

KMC - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்