இடம்பெயர்ந்த மக்களுக்கான நிதியில் புதிய வேலைத் திட்டம்: நிறுத்துமாறு உத்தரவிடக் கோருகிறார் றிசாட்

🕔 December 2, 2018

டக்கில் இடம்பெயர்ந்த மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக, வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 250 மில்லியன் ரூபாவில், புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரச மாவட்ட செயலாளர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரையை ரத்துச் செய்து, புதிய வேலைத்திட்டத்தை நிறுத்த எழுத்துமூலம் உத்தரவிடுமாறு சபாநாயகரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றியபோதே , இந்த வேண்டுகோளை அமைச்சர் விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

“இந்த வேலைத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் கொள்கைத் திட்டமிடல் அமைச்சின் அனுமதியும் பெறப்பட்டிருந்தது.

எனினும், குறித்த வேலைத்திட்டத்தில் 250 மில்லியன் ரூபாவக்கான நிதி நிறுத்தப்பட்டு, புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றின் மூலம் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 14, 15, 16 ஆம் திகதிகளில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் அடிப்படையில், புதிய அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதை கருத்திற்கொண்டு, புதிய வேலைத்திட்டத்தை நிறுத்துமாறு, எழுத்துமூலம் பணிப்புரை விடுக்குமாறு சபாநாயகரிடம் வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்