சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேருக்கு, எதிரணியில் அமர அனுமதி

🕔 September 16, 2015
Parliament - 0011ஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – எதிரணியில் அமர்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாத, சுதந்திரக் கட்சியை சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை மாலை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

இதன்போதே, இவர்கள் நாடாளுமன்றில் எதிரணியினராக அமர்வதற்கு, ஜனாதிபதி அனுமதியை வழங்கியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகபெரும, மஹிந்தானந்த அளுத்கமகே, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன உட்பட 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

எதிரணியில் அமரவுள்ள உறுப்பினர்களின் விபரங்கள்

டலஸ் அழகப்பெரும
மஹிந்தானந்த அளுத்கமகே
பவித்ரா வன்னியாராச்சி
ரோஹித அபேகுணவர்தன
ரஞ்சித் சொய்ஸா
மஹிந்த ராஜபக்ச
நாமல் ராஜபக்ச
சமல் ராஜபக்ச
சாலிந்த திஸாநாயக்க
ரமேஷ் பத்திரன
சானக டில்ஷான்
எஸ்.பீ.முத்துகுமாரன
பிரசன்ன ரணவீர
இந்திக்க அநுருத்த
சிசிர ஜயகொடி
ஸ்ரீயானி விஜேவிக்ரம
மனுஷ நாணயக்கார
ஷெஹான் சேமசிங்க
ஜொன்ஸ்டன் பிரனாந்து
பியல் நிஷாந்த சில்வா
மஹிந்த யாப்பா அபேவர்தன
ரோஷான் ரணசிங்க
எஸ்.எம்.சந்திரசேன
கனக ஹேரத்
பந்துல குணவர்தன
காஞ்சனா விஜேசேகர
காமினி லொக்குகே
விதுர விக்ரமரத்நாயக்க
சனத் நிஷாந்த
திலும் அமுனுகம
லோஹான் ரத்வத்தே
பிரசன்ன ரணதுங்க

இவர்களுக்கு மேலதிகமாக, சுதந்திரக் கட்சியல்லாத, முன்னணி உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் 22ஆம் திகதி எதிரணியில் ஆசனம் பெறவுள்ளனர். அவர்கள்:

ஜயந்த சமரவீர
விமல் வீரவன்ச
வாசுதேவ நாணயக்கார
உதய கம்மன்பில
வீரகுமார திஸாநாயக்க
பத்ம உதயஷாந்த
நிரோஷன் பிரேமரத்ன

Comments

புதிது பேஸ்புக் பக்கம்