சொந்த மரணத்தை உணர முடியும்; புதிய ஆய்வுகள் தெரிவிப்பு

🕔 November 22, 2018

றந்தவர்கள் தமது சொந்த மரணத்தை உணர முடியும் என, புதிய ஆய்வுகள் கூறுகின்றன.

உதாரணமாக, சத்திர சிகிச்சைக்குள்ளாகும் ஒருவருடைய மூளைக்கு  இரத்தத்தை வழங்குவதை இதயம் நிறுத்திக் கொள்ளும் தருணத்தை,  மரணத்தின் அதிகாரப்பூர்வ நேரமாக பதிவு செய்கின்றனர்.

ஆனாலும், ஒரு குறுகிய நேரத்துக்கு  இறந்த நபரின் மனம் மற்றும் உணர்வுகள் தொடர்ந்து வேலை செய்வதை புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. இதன் அர்த்தம், இறந்தவர்கள் தங்கள் சொந்த மரணத்தை  உணர முடியும்  என்பதாகும்.

உண்மையில் ‘இறந்த நபர்’ சத்திர சிகிச்சைக் கூடத்தின்  மேசையில் இருக்கும் போது,  தனது  சொந்த மரணம் அறிவிக்கப்படுகையில், அதனைக் கேட்டிருக்கக் கூடும்.
இந்த கட்டத்தில், அந்த நபர் – ஒரே நேரத்தில் இறந்து போயும்,  உயிருடனும்   இரண்டு மனிதராக  இருப்பார்.
நியூயார்க் லங்கன் மெடிக்கல் இன்ஸ்டிட்யூட்டி  பராமரிப்பு மற்றும் மறு ஆய்வு ஆராய்ச்சி இயக்குனர் டொக்டர் சாம் பார்னி கூறுகையில்;
“மரணத்தின் முதல் கட்டத்தில் உள்ளவர்கள் இன்னமும் சில வகையான உணர்வுகளை அனுபவிக்கலாம். மூளைக்கு ரத்தம் செல்வது நின்றவுடன்  மூளை செயல்பாட்டை கிட்டத்தட்ட உடனடியாக நிறுத்துகிறது” என்கிறார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்