200 வருட மரம் வீழ்ந்தது; தலவாக்கலையில் போக்குவரத்து பாதிப்பு

🕔 November 22, 2018

– க. கிஷாந்தன் –

லவாக்கலை மல்லியப்பு பகுதியில் இன்று வியாழக்கிமை காலை 200 வருடம் பழமை வாய்ந்த பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததனால், அவ் வீதியூடான பொது போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு,  அப்பகுதிக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில்  இந்த மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக மரத்துக்கு கீழே இருந்த ஆலயம் ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

பாதை தடைபட்டுள்ள போதிலும் சிறிய வாகனங்கள் மட்டும் பயணிக்க முடிகிறது. ஆனால், கனரக வாகனங்களால் பயணிக்க முடியவில்லை.

எனினும், இந்த மரத்தினை வெட்டி அகற்றும் பணியில் பிரதேச பொது மக்களும், தலவாக்கலை மற்றும் லிந்துலை பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு, மின்சார இணைப்புகளை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளில் லிந்துலை மின்சார சபையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்