பிரதமர் அலுவலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தக் கோரி, ஐ.தே.கட்சி பிரேரணை சமர்ப்பிப்பு

🕔 November 19, 2018

பிரதமர் அலுவலகத்துக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தக் கோரும் பிரேரணையை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்தனர்.

பிரதமர் அலுவலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவதற்கான யோசனை, கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இன்று முன்வைக்கப்பட்டது.

இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் இது குறித்து தீர்மானிப்பதற்கு தங்களிற்கு ஐந்து நாட்கள் அவசியம் என தெரிவித்தனர்.

இதற்கமைவாக 29 ம் திகதி இந்த யோசனை மீது வாக்கெடுப்பை நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் மத்தியில் இணக்கம் காணப்பட்டது.

இந்த நிலையில், அரச நிதியை கையாள்வதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திடமே உள்ளது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்