ஐந்து நிமிடம் கூடிக் கலைந்த நாடாளுமன்றம்; 23ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

🕔 November 19, 2018

நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை கூடிய நிலையில், 05 நிமிடங்கள் மட்டுமே சபை அமர்வுகள் நடைபெற்ற நிலையில், 23ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சபைக்கு சமூகமளிக்காமையினால், பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, இன்றைய அமர்வுக்குத தலைமை தாங்கினார்.

இன்றைய தினம் ஒரு மணியளவில் பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டவுடனேயே தினேஷ் குணவர்தனவ புதிய தெரிவுக்குழுக்களை உருவாக்குவது அல்லது ஸ்தாபிப்பது தொடர்பான பிரேரணையை முன்வைக்குமாறு தெரிவித்தார். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர்.

அரசாங்கம் பெரும்பான்மையினை இழந்து காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் தெரிவுக்குழுக்களை ஸ்தாபிக்க முடியாது எனக் கூறியே இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதேவேளை, நாடாளுமன்ற தளபாடங்களை சேதப்படுத்தியமை குறித்து விசாரிக்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

எவ்வாறாயினினும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, அதற்கான பெயர் விபரங்களை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்குமாறு பிரதி சபாநாயகர் அறிவித்ததை தொடர்ந்து நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதேவேளை, இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகளைக் காண, பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்