நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்: ஆசனத்திலிருந்து இறங்கினார் சபாநாயகர்

🕔 November 15, 2018

நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட குழப்பம் காரணமாக, சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தை விட்டும் இறங்கிச் சென்றார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் சபையை விட்டு வெளியேறியுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய பின்னர், லக்ஷ்மன் கிரியெல்ல மஹிந்தவின் உரையில் கூறப்பட்ட விடயங்கள் உண்மையல்ல என்று கூறி, இன்றும் மீண்டுமொரு வாய்மூல நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்தே சபையில் குழப்பம் ஏற்பட்டது.

இதன்போது ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி நகர்ந்தனர். அவ்வேளை சபாநாயகரை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்களும் படைக்கல சேவியர்களும் அவ்விடத்தில் குவிந்தனர்.

இதனையடுத்து இரு குழுவினருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

இதன் காரணமாக சபாநாயகர் தனது ஆசனத்தைவிட்டும் இறங்கிச் சென்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்