மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு

🕔 November 14, 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருடைய அமைச்சரவைக்கும் எதிராகவும் நாடாளு,மன்றில், இன்று புதன்கிழமை நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்து, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வழிமொழிந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அதற்கு ஆதரவாக பெரும்பான்மையானோர் வாக்களித்ததாக சபாநாயகர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, நம்பிக்கையில்லாப் பிரேரணையை உறுதிப்படுத்திய ஆவணம் தன்னிடம் வழங்கப்பட்டதாகவும் சபாநாயகரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, உறுப்பினர்களின் கையெழுத்துடன் இதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் சபாநாயகர் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்