இன்று கூடிய நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்; நாளை வரை ஒத்தி வைப்பு

🕔 November 14, 2018

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கூடிய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பங்களினால், நாளை வரை நாாடளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. பிரதமர் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார். ஆளும்கட்சி வரிசையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான, புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பெற்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆரம்பம் முதலே சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்தார். அதே கட்சியைச் சேர்ந்த எம்.பி. விஜித ஹேரத், அதனை வழிமொழிந்தார்.

நிலையியல் கட்டளைச் சட்டத்தின்படி, வாக்கெடுப்பை நடத்துவதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்தார்.

அதனையடுத்து, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் 10:27 மணியளவில் சபாநாயகர் நாடாளுமன்றத்தை நாளை காலை 10 மணிவரை சபா நாயகர் ஒத்திவைத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்