அமர்சர்கள்பௌசி, பியசேன கமகே எதிர் தரப்புக்கு மாறினர்: வடிவேல் சுரேஸ் மீண்டும் தாவினார்

🕔 November 14, 2018

மைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி மற்றும பியசேன கமகே ஆகியோர் நாடாளுமன்றத்தில், எதிர் தரப்பு ஆசனங்களில் அமர்ந்தனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகாரவும் எதிர் தரப்பில் அமர்ந்தார்.

இந்த நிலையில், சுற்றுலா மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு துறை அமைச்சர் வசந்த சேனநாயக்கவும் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளுந்தரப்புக்குச் சென்று அமைச்சுப் பதவி பெற்ற வடிவேல் சுரேஷ், தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளதோடு, மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்றுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்