வை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்

🕔 November 13, 2018

– எம்.வை. அமீர்-

பிரபல அரசியல் ஆய்வாளர் வை.எல்.எஸ். ஹமீட், சட்ட முதுமாணி பட்டத்தை இன்று செவ்வாய்கிழமை பெற்றுக் கொண்டார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமாணி கற்கையினை நிறைவு செய்த வை.எல்.எஸ். ஹமீட், இன்று சட்ட முதுமாணி பட்டத்தை பெற்றார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டத்தினை நிறைவு செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது, கொழும்பு பல்லைக்கழக வேந்தரிடமிருந்து வை.எல்.எஸ். ஹமீட், முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட ஹமீட், சட்ட ரீதியில் சிக்கல்கள் நிறைந்த விடயங்களை, சாதாரண மக்களும் விளங்கும் வகையில், ஊடகங்களுக்கு எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்