வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மு.கா. உறுப்பினர் ஏ.சி. பதுறுத்தீன் வபாத்தானார்

🕔 September 15, 2015

Bathurudeen - 01
– முன்ஸிப் –

லைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மு.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி. பதுறுத்தீன் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல்  கொழும்பு பொது வைத்தியசாலையில் வபாத்தானார்.

சில நாட்களுக்கு முன்னர் விபத்தொன்றில் காயமடைந்து, கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே – இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அவர் வபாத்தானார்.

1951 ஆம் ஆண்டு பிறந்த இவர் – மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட பதுறுத்தீன், கொழும்பில் திருணம் செய்து அங்கேயே வசித்து வந்தார்.

மு.காங்கிரசின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான இவர், அக்கட்சியின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்புச் செய்தவராவார்.

ஆயினும், முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸதீன், அக்கட்சியின் தலைவர் அஸ்ரப் அவர்களால் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதையடுத்து, பதுறுத்தீனும் மு.கா.விலிருந்து விலகினார்.

சிறந்த பேச்சாளரான இவர், மிகவும் நகைச்சுவையுணர்வு கொண்டவராவார்.

மு.காங்கிரசின் ஸ்தாபகர் தலைவர் எம்.எச்.எம். அஸ்ரஃப்பின் நினைவு தினம் நாளை 16 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அந்தக் கட்சியின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்புச் செய்த ஏ.சி. பதுறுத்தீன் இன்று வபாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்