புதிய அரசாங்கத்தில் இணைவது தொடர்பில், இன்னும் தீர்மானிக்கவில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம்

🕔 November 7, 2018
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று புதன்கிழமை புதிய அரசாங்கத்துடன் இணையும் என்று, பிரதி அமைச்சர்  நிஷாந்த முத்துஹெட்டிகமகே கூறியுள்ள தகவலை, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு உலமாக்கள் கலந்துகொண்ட சந்திப்பிலேயே ரவூப் ஹக்கீம் தனது மறுப்பினை வெளியிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எந்த விதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை.

அதேவேளை, புதிய அரசாங்கத்தின் மு.காங்கிரரஸ இணையும் என்று, பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கூறிய கருத்தை தான் மறுப்பதாக ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: முஸ்லிம் கட்சிகள், உலமாக்களை அழைத்து ஆலோசனை கேட்பது ஆபத்தாகும்: பஷீர்

(மு.காங்கிரசின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்