மஹிந்தவை பிரதமராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை: சபாநாயகர் அறிவிப்பு

🕔 November 5, 2018

ஹிந்த ராஜபக்ஷ, தனக்கான பெரும்பான்மையினை நிரூபிக்கும் வரை, நாடாளுமன்றில் பிரதமருக்குரித்தான ஆசனத்தை அவருக்கு வழங்கப் போவதில்லை என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட் போது, காணப்பட்ட நிலைதான், நாடாளுமன்றம் கூடும் போது தொடரும் எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமருக்கு பிரதமருக்கான ஆசனத்தை வழங்கப்போவதில்லை என்றும், தற்போதைய அரசாங்க உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்வார்கள் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் சட்டவிரோதமானது என, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு  எழுத்து மூலம் அறிவித்துள்ளதை அடுத்தே, இந்த முடிவை எடுத்ததாகவும் சபாநாயகர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில் அவருக்கான பிரதமர் நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், 116 உறுப்பினர்களின் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்காது அரசியலமைப்புக்கு முரணான வகையில் செயற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள சபாநாயகர், இனிமேல் தன்னால் மெளனம் காக்க முடியாது எனவும் விவரித்துள்ளார்.

நாட்டின் நீதியையும் நியாயத்தையும், உலகுக்கு எடுத்து கூறவேண்டி பொறுப்பு தன்னிடம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு அனுப்பிய கடிதம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கரிசனைகள் நியாயமானவை என நான் கருதுகின்றேன். இதன் காரணமாக கட்சியொன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை மாற்றங்களை மேற்கொள்ள மாட்டேன் என, அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்