நாடாளுமன்றம் 14ஆம் திகதி கூடுகிறது: வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டார்

🕔 November 4, 2018

திர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக 26ஆம் திகதி நியமித்தமையினைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை நொவம்பர் 16ஆம் திகதி வரை ஜனாதிபதி ஒத்தி வைத்தார்.

ஒக்டோபர் 27ஆம் திகதி, நாடாமன்றத்தை ஒத்தி வைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்காகவே, நாடாளுமன்றம் இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டதாக, ஏனைய அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

இதேவேளை, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு வெளிநாடுகளும் அழுத்தம் கொடுத்து வந்த நிலையிலேயே, எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றதைக் கூட்டும் அறிவித்தலை, ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்