12 அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் தலா ஒருவர்; இன்று பதவியேற்பு

🕔 October 29, 2018

மைச்சரவை அந்தஸ்துள்ள 12 அமைச்சர்களும் ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர்.

இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அமைச்சர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு;

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

  1. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள்அமைச்சர்
  2. நிமல் சிறிபால டி சில்வா – போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்
  3. கலாநிதி சரத் அமுனுகம – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
  4. மஹிந்த சமரசிங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சர்
  5. மஹிந்த அமரவீர – விவசாய அமைச்சர்
  6. ரஞ்சித் சியம்பலாபிட்டிய – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர்
  7. கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ – கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்
  8. விஜித் விஜயமுனி சொய்ஸா – மீன்பிடிஇ நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர்
  9. ஆறுமுககன் தொண்டமான் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்
  10. டக்ளஸ் தேவானந்தா – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர்
  11. பைசர் முஸ்தபா – மாகாண சபைகள்இ உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
  12. வசந்த சேனாநாயக்க – சுற்றுலாத் துறை மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் ராஜாங்க அமைச்சர்

ராஜாங்க அமைச்சர்

  1. வடிவேல் சுரேஸ் – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்பிரதி அமைச்சர்

பிரதியமைச்சர்

  1. ஆனந்த அளுத்கமகே – சுற்றுலாத் துறை மற்றும் வனசீவராசிகள் பிரதி அமைச்சர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்