நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அமெரிக்கா கோரிக்கை; பாதுகாப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது

🕔 October 29, 2018

பாநாயகருடன் பேசி, நாடாளுளுமன்றத்தை கூட்டுமாறு, ஜனாபதி மைத்திரிபால சிறிசேனவை அமெரிக்கா கோரியுள்ளது.

ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தங்கள் பொறுப்புகளை மேற்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் பேச்சாளர் நவ்ரட் ஹெதர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது;

இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்தும் கரிசனையுடன் செயற்படுகிறது.

அத்துடன் வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்களிலிருந்து அனைத்துத் தரப்பினரும் விலகியிருக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையினை அடுத்து, இலங்கையிலுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு இன்று திங்கள்கிழமை, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிகையை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்