பிரதமர் மஹிந்தவின் செயலாளராகிறார் லலித் வீரதுங்க

🕔 October 27, 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக லலித் வீரதுங்க நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷ – ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவருடைய செயலாளராக லலித் வீரதுங்க பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜனாதிபதியின் அதிகாரத்துக்கிணங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளமையை, ஜனாதிபதி செயலகத் தரப்புக்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, வேட்பாளராகப் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவைத் திரட்டிக் கொள்ளும் பொருட்டு ‘சில்’ துணிகளை பகிர்ந்தளிக்க உடந்தையாக இருந்தார் எனும் குற்றச்சாட்டில், லலித் வீரதுங்க மீது நல்லாட்சி அரசாங்கத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்