‘ரோ’வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சரவையில் இருப்பதற்கு, மஹிந்த அமரவீர வெட்கப்பட வேண்டும்: நாமல்

🕔 October 26, 2018

ந்திய புலனாய்வு பிரிவான ‘ரோ’ வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சர்கள் இருக்கின்ற அமைச்சரவையில் அங்கம் வகிப்பது தொடர்பில், மகிந்த அமரவீர வெட்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“நாட்டு மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், அமைச்சர்கள் ரோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பு வைத்திருக்க மாட்டார்கள் என்பதையே முன்னாள் ஜனாதிபதி கூறினார். ஆனால், தான் இருக்கும் அமைச்சரவையில் இருப்பவர்கள் பற்றி நம்பிக்கை இல்லாமல் மஹிந்த அமரவீர கருத்து வெளியிட்டுள்ளார்.

ரோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சர்கள் உள்ள அமைச்சரவையில் அங்கம் வகிப்பது குறித்து, மகிந்த அமரவீர வெட்கப்படவேண்டும்.

அமைச்சரவையில் ரோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளமை, பாரதூரமான விடயம். இது தொடர்பில் மஹிந்த அமரவீர ஆதரங்களை வெளிப்படுத்தவேண்டும்.

அவ்வாறானவர்கள் யார் என்பதை, மக்கள் மன்றத்தில் அறிவிக்க வேண்டும்” என்றார்.

அமைச்சரவையில் இடம்பெறும் விவகாரங்களை, இந்தியாவின் ‘ரோ’  அமைப்புக்கு நான்கு அமைச்சர்கள் தெரியப்படுத்டதிக் கொண்டு, தொடர்ந்தும்  சுதந்திரமாக செயற்படுகின்றமை ஆபத்தானதென விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று கூறியிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்