39 வயது 44 பிள்ளைகள்: மரியத்தின் கதை

🕔 October 24, 2018

கண்டாவில் மரியம் நபாடாசி என்ற பெண் 44 குழந்தைகளுக்கு தாயாகி அந்நாட்டின் பத்திரிகை பலவற்றுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தலைப்பு செய்தியாகி வருகிறார்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவின் கபிம்பிரி கிராமத்தைச் சேர்ந்த 39 வயதான மரியம் நபாடன்ஸி 44 குழந்தைகளை பெற்று அந்நாட்டின் அதிக குழந்தைகளை பெற்ற பெண்மணி என்ற சிறப்பை பெற்றிருக்கிறார்.

12 வயதில் திருமணமான மரியத்தின் இல்லற வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. கணவர் மூலம் கொடுமையை அனுபவித்து வந்திருக்கிறார். ஆறு முறை இரட்டை குழந்தைகளையும், நான்கு முறை மூன்று குழந்தைகளையும், மூன்று முறை நான்கு குழந்தைகளையும் பெற்றேடுத்திருக்கிறார்.

தனது 39 ஆண்டு வாழ்வில் 18 ஆண்டுகள் கர்ப்பவதியாகவே கழித்ததாகவும், 44 குழந்தைகளில் தற்போது 38 குழந்தைகள் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர்.

மரியத்தின் கருப்பையில் மரபியல் ரீதியாக ஏற்பட்ட மாற்றத்தின் காரணமகவே அவருக்கு அதிக எண்ணிக்கையில் கருமுட்டைகள் உற்பத்தியனாதகாவும் அவற்றை கலைக்க முயன்றால் அவர் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியதைத் தொடர்ந்து தனது 44 குழந்தைக்குப் பிறகு தனது கருப்பையை மரியம் நீக்கிவிட்டார்.

மரியத்தின் குடும்பத்துக்கு ஒவ்வொரு நாளும் மிக அதிகளவான உணவு தேவையாக உள்ளது. உதாரணமாக, இவர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டரைக் கிலோகிராம் சீனி தேவையாக உள்ளது.

இந்த நிலையில், மரியம் மட்டுமெ வேலைக்கு சென்று பிள்ளைகளைக் காப்பாற்றி வருவகின்றார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்