ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடியில் மாபெரும் கௌரவம்

🕔 October 21, 2018
லக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி பதில் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு நேற்று சனிக்கிழமை காத்தான்குடி  பொது மக்கள் மகத்தான வரவேற்பு வழங்கி கௌரவித்தனர்.

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவாகியதை கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி நகர சபை தவிசாளர், உப தவிசாளர் உட்பட நகர சபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காத்தான்குடி  மத்திய குழுவினர், உலமாக்கள், புத்திஜீவிகள் மற்றும் பொது மக்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு உலமாக்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

உலக முஸ்லிம் லீக்கின் 43ஆவது பொதுச் சபைக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை மக்காவில் நடைபெற்றது.

இதில் தெற்காசிய பிரதிநிதியாக பங்கேற்ற ராஜாங்க அமைச்சர் அங்கு தனது உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை வரலாற்றில் முன்னாள் சபாநாயாகர் எம்.எச். முஹம்மட்டுக்கு பின்னர் இப்பாரிய பொறுப்பு ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்