ஐந்து வருடங்களுக்குத் தேவையான வாகனங்கள் இறக்குமதி: அண்ணிய செலாவணி நெருக்கடி அதிகரிக்கும் என எச்சரிக்கை

🕔 October 21, 2018

டுத்த 05 ஆண்டுகளுக்குத் தேவையான மோட்டார் வாகனங்கள், நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம், மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மோட்டார் வாகனங்கள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடு அமுல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, இந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

பொருளாதார நிபுணர்கள் குழுவொன்றின் அறிக்கையொன்றின் படி, வருடமொன்றுக்கு நாட்டுக்குத் தேவையான மோட்டார் வாகனங்களின் தொகை 45 ஆயிரமாகும்.

ஆனால், 02 லட்சத்து 34 ஆயிரம் வாகனங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, 01 லட்சத்து 68 ஆயிரத்து 419 முச்சக்கர வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆயினும், ஒரு வருடத்துக்கு 20 ஆயிரம் முச்சக்கர வண்டிகளே நாட்டுக்குத் தேவையாக உள்ளன.

மேலும் வருடமொன்று 03 லட்சம் மோட்டார் பைக் தேவையாக இருக்கும் நிலையில், 09 லட்சத்து 43 ஆயிரத்து 920 மோட்டார் பைக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான அதிகரித்த வாகன இறக்குமதியானது, கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்