தமிழில் உளவியல் நூலொன்றை, கலாநிதி றியால் எழுதியுள்ளமை வரவேற்கத்தக்கது: டொக்டர் சறாப்டீன்

🕔 October 18, 2018

– றிசாட் ஏ. காதர் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.எம். றியால் எழுதிய  ‘உளவியல் மூலக் கோட்பாடுகள்’ எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு, இன்று வியாழக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி எம்.எல். பௌசுல் அமீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

தமிழ் மொழியில் உளவியல் தொடர்பான நூல்கள் மிக அரிதாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ‘உளவியல் மூலக் கோட்பாடுகள்’ எனும் தலைப்பில் கலாநிதி றியால் நூலொன்றினை எழுதியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும் என்று, இந்த நிகழ்வில், நூல் மதிப்பீட்டுரையினை மேற்கொண்ட உளநல வைத்தியர் யூ.எல். சறாப்டீன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா, சமூகவியல் துறைத் தலைவர் ரமீஸ் அபூபக்கர் ஆகியோரும் உரை நிகழ்தினர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இந்த மாதத்தில் வெளியிடப்பட்ட ஆறாவது நூல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்