நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்த, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி

🕔 October 17, 2018

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்துவதற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வது தொடர்பில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் தொலைபேசி உரையாடலொன்று அண்மையில் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையிலேயே, நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே, தேசிய பொலிஸ் ஆணைக்குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்