தன்னை கொல்ல ‘ரோ’ முயற்சிக்கிறதென, ஜனாதிபதி கூறியதாக வெளியான செய்திகள் பொய்யானவை

🕔 October 17, 2018

ன்னை கொலை செய்ய இந்தியாவின் ‘ரோ’ உளவுத்துறை நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக, ஊடகங்களில் வெளியான செய்திகள், உண்மைக்குப் புறம்பானவை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்படி தகவலை ஜனாதிபதி தெரிவித்தாக, இந்தியாவின் ‘த ஹிந்து’ செய்தித்தாள் இன்று புதன்கிழமை செய்தி வௌியிட்டுள்ளது.

இதேவேளை, இந்த கொலை திட்டம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதுவும் தெரியாது என்று ஜனாதிபதி கூறியிருந்ததாகவும் அந்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைவயில், இன்று புதன்கிழமை இ்டம்பெற்ற அமைச்சவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன , ‘த ஹிந்து’ செய்தித்தாளில் வௌியாகியுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என கூறினார்.

மேலும் , அமைச்சரவை கூட்டத்தில் இடம்பெற்றதாக தெரிவித்து பல்வேறு ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது எனவும்,  அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்