நாயின் கழிவுகளைக் கூட அள்ள வைத்தனர்; நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்றவர் வாக்கு மூலம்

🕔 October 15, 2018

நாயின் கழிவுகளைக் கூட,  என்னை அவர்கள் அள்ள வைத்தனர்” என்று, இந்தியாவில் நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

டெல்லி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணகாந்த் சர்மா என்பவரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்,  நீதிபதியின் மனைவி (வயது 38) மற்றும் மகன் (வயது 18) ஆகியோர் மீது, கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

நீதிபதியின் மனைவி மற்றும் மகன் ஆகியோர், பொலிஸ் உத்தியோகத்தரை அழைத்துக் கொண்டு, அவர்களின் காரில் பொருட்கள் கொள்வனவு செய்யச் சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இதனையடுத்து நீதிபதியின் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இதன் பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்த பொலிஸார், அவரிடம் விசாணை நடத்தினர்.

இதன் போது அவர் வாக்குமூலம் வழங்குகையில்; “அவர்கள் பிசாசுகள். அதனால் சுட்டுக் கொன்றேன். மிகவும் அசிங்கமானவர்கள். என்னை மிகவும் மோசமாக நடத்தினார்கள். நாயின்  கழிவுகளை அகற்றக் கூட என்னைப் பயன்படுத்தினார்கள். அவர்களைப் பொறுத்த வரை – நாயும் பொலிஸ்காரர்களும் ஒன்றுதான்” என தெரிவித்துள்ளார்.

விசாரணையின்போது மகிபால் சிங் மிகவும் ஆக்ரோஷத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆயினும் மகிபால் சிங் நல்ல மனநிலையில்தான் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குருகிராமில் உள்ள பொலிஸ் குடியிருப்பில் மகிபால்சிங் வசித்து வந்துள்ளார். மனைவியும் இரு மகள்களும் அவருக்கு உள்ளனர்.

இந்த நிலையில், நீதிபதியின் மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீதிபதியின் மனைவியைச் சுட்ட பிறகு, அவரை போனில் அழைத்த பொலிஸ் உத்தியோகத்தர் மகிபால் சிங்; “உன் மனைவியை சுட்டு விட்டேன்“ என்று கூறிவிட்டு தப்பித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடந்த இரண்டு மணி நேரத்தில் மகிபால் சிங்கை பொலிஸார் கைது செய்தனர்.

இதனையடுத்து, அவர் உடனடியாக பணியில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டார்.

நீதிபதியின் குடும்பத்தினர் மீது, சூடு நடத்திய இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்