நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை அலுவலகத்தை, அம்பாறைக்கு கொண்டு செல்ல தீர்மானம்

🕔 October 10, 2018

– றிசாத் ஏ காதர் –

ல்முனை நகரில் அமையப்பெற்றுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகத்தை, அம்பாறை அலுவலகத்துடன் இணைப்பதற்கான அனுமதியை, அச்சபையின்  பணிப்பாளர் சபை வழங்கியுள்ளது.

கல்முனை அலுவலகத்துக்கான செலவீனம் அதிகமாக இருப்பதாக தெரிவித்து, குறித்த அலுவலகத்தை, அம்பாறை அலுவலகத்துடன் இணைப்பதுக்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி, செப்டம்பர் மாதம் 18ஆம் திகதியன்று நடைபெற்ற பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கல்முனையில் அமையப்பெற்றிருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலகம் அம்பாறைக்கு இடமாற்றப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதனால், பொத்துவில் தொடக்கம் நீலாவணை வரையில் வாழும் மக்கள், தமக்கான பணியினை நிறைவு செய்து கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கல்முனையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம், அம்பாறை அலுவலகத்துடன் இணைக்கப்படுமானால், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்து மக்கள் தமது அலுவல்களை நிறைவு செய்து கொள்ளும் பொருட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.

எனவே,  இந்த விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக கவனத்திற் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுதல் அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்