காசு வாங்கிக் கொண்டு நான் கட்சி மாறப் போகிறேன், எனும் கதையை அதாஉல்லா நம்பி விட்டார்: உதுமாலெப்பை கவலை

🕔 September 27, 2018

– அஹமட் –

மைச்சர் றிசாட் பதியுதீனிடமிருந்து 30 மில்லியன் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு, புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கப் போவதாக சிலர் கூறிய கட்டுக் கதைகளை, தனது கட்சியின் தலைவர் அதாஉல்லா நம்பி விட்டதாக, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கவலை தெரிவித்தார்.

மேலும், தன்மீதான நம்பிக்கையில் தனது கட்சித் தலைவர் அதாஉல்லாவுக்கு இதன் மூலம், ஓர் ஆட்டம் ஏற்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.

‘வசந்தம்’ தொலைக்காட்சியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற ‘அதிர்வு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே, உதுமாலெப்பை இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;

“கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுபையிர், என்னைப் பற்றி ஒரு அபாண்டமான கதையினை, எனது கட்சித் தலைவர் அதாஉல்லாவிடம்  கூறியிருந்தார்.

அதாவது, அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் 30 மில்லியன் ரூபா பணத்தை நான் வாங்கிக் கொண்டு, புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாகவும், அதன் பின்னர் அமைச்சர் றிசாட் பதியுதீனோடு – நான் இணையப் போவதாகவும் முன்னாள் அமைச்சர் சுபையிர் கூறியிருந்தார்.

தேசிய காங்கிரசில் நான் வகித்த பதவிகளை ராஜிநாமா செய்த பிறகே, இந்தக் கதையை அவர் கட்டி விட்டார்.

இதனை, எனது கட்சியின் தலைவர் அதாஉல்லாவும் நம்பி விட்டார். என்னைப் பற்றிய நம்பிக்கையில், இதன்போது தலைவர் அதாஉல்லாவுக்கு ஓர் ஆட்டம் ஏற்பட்டது. அதனை நான் கண்டு கொண்டேன்”  என்றார்.

உதுமாலெப்பை கூறியமையின் ஒலி வடிவம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்