பண மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியாது விட்டால், நாட்டை ஒப்படையுங்கள்: மஹிந்த

🕔 September 22, 2018

நாட்டின் பணத்தினுடைய மதிப்பிறக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசாங்கம் உடனடியாக பதவிவிலக வேண்டும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலமை தொடர்பில் தௌிவுபடுத்தும் நோக்கில் இன்று சனிக்கிழமை கொழும்பில், ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டது. இதில் பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நாட்டில் சரியான தலைமைத்துவம் இன்மையே இந்த பொருளாதார சிக்கலுக்கு காரணமாகும்.

நான் அரசாங்கத்தை ஒப்படைக்கும் ​போது அமெரிக்க டொலர் ஒன்று 131 ரூபாய் 40 சதமாக இருந்தது. ஆனால் தற்போது அது 170 ரூபாவையும் தாண்டியுள்ளது.

ரூபாவின் மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசாங்கத்தை மீண்டும் எங்களிடம் ஒப்படையுங்கள்” என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிரணியின்  நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநரும் சமூகமளித்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்