சமையல் எரிவாயுவின் விலையை 195 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானம்
சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச் செலவுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
அதற்கிணங்க 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவை 195 ரூபாவால் அதிகரிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, பால் மாவின் விலையை 25 ரூபாவால் குறைப்பதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்கிழமை கூடிய வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.