தேசிய அரசாங்கத்தில் கிடைத்துள்ள அதிகாரங்களை, சிறந்த முறையில் மு.கா. பயன்படுத்தும்; ஹக்கீம் தெரிவிப்பு

🕔 September 10, 2015

Hakeem - Jawatta - 02
தே
சிய அரசாங்கத்தில் கிடைத்துள்ள அதிகாரங்களை, தமது கட்சி சிறந்த முறையில் பயன்படுத்துமென்றும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதேவேளை, தமது கட்சியானது, சவால்களை வெற்றிகரமாக முறியடித்துக் கொண்டு முன்னேறிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்
டார்.

கொழும்பு ஜாவத்தை பள்ளிவாசலில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற விஷேட பிரார்த்தனை நிகழ்வின் கலந்து கொண்ட பின்னர் உரையாற்றும் போதே, மு.கா. தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம் மற்றும் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் இன்று பிரதியமைச்சர்களாகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமையினைத் தொடர்ந்து, மு.கா. தலைவர் ஹக்கீமுடன் ஜாவத்தை பள்ளிவாசலுக்கு வருகை தந்து, விஷேட ‘துஆ’ பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலர் சமூகமளித்திருந்தனர்.

‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஜனாஸா, நாம் தற்போது கூடியிருக்கும் ஜாவத்தை பள்ளிவாசல் மையவாடியில்தான் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே, எமது கட்சியின் செயற்பாடுகளை மிகவும் வீரியத்துடன் முன்னெடுப்பதற்கு இந்த இடத்தில் திடசங்கற்பம் பூணுவோம்’ என்று குறிப்பட்ட அமைச்சர் ஹக்கீம், மு.கா.வின் ஸ்தாகத் தலைவர் அஷ்ரப் அவர்கள், இதே போன்ற செப்டம்பர் மாதம் 16ஆம் திகதியன்று, சுமார் ஒன்றரை தசாப்;தங்களுக்கு முன்னர், இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றமையினையும் நினைவூட்டினார்.Hakeem - Jawatta - 04Hakeem - Jawatta - 01Hakeem - Jawatta - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்