ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு

🕔 September 17, 2018

ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். ஹிஸ்புல்லாவையும் அவருடைய மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனத்திடம் காணப்பட்ட 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் ஏனைய பொருட்களைக் கடத்தியதுடன், அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற விதத்தில் தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே, ராஜாங்க அமைச்சரையும் அவருடைய மகனையும் கைதுசெய்யுமாறு, நீதிவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

‘லங்கா பில்டர்ஸ் கோப்பரேடிவ் சொஸையிட்டி’ நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த என்பவர்,பொலிஸ்மா அதிபர் ஊடாக – கடந்த ஜனவரி மாதம் குற்ற விசாரணை திணைக்களத்தில் செய்த முறைபாட்டுக்கு அமைய, மேற்படி விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்