மைத்திரியும் முந்திரிப் பருப்பும், அதற்கு முந்தையதொரு கதையும்

🕔 September 14, 2018

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த போது தனக்கு முந்திரிப் பருப்பு வழங்கப்பட்டதாகவும், அதனை நாய் கூட உண்ணாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தது பெரும் பேசு பொருளாகிப் போனது பற்றி அறிவோம்.

விவசாயிகளின் நிகழ்வொன்றில் உரையற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறியிருந்தார்.

விமான சேவையில் இவ்வாறு மனிதர்கள் பயன்படுத்த முடியாத தரக்குறைவான உணவுகளை அனுமதித்தது யார்? இதற்கு யார் பொறுப்பு, என்றும் ஜனாதிபதி இந்த நிகழ்வில் கேள்வியெழுப்பியிருந்தார்.

“ஸ்ரீலங்கன் விமான சேவை ஒரு பில்லியன் டொலர் கடனில் இருக்கிறது. இலங்கையில் விளையும் தரமான முந்திரிப் பருப்புக்களைத் தவிர்த்துவிட்டு, மோசடி வர்த்தகர்களின் தேவைக்காக, வெளிநாடுகளில் இருந்து இவ்வாறு தரம்குறைந்த பொருட்கள் இறக்குமதி செய்வதைத் தடுக்க வழி செய்ய வேண்டும்” என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

முந்தைய முந்திரிக் கதை

ஜனாதிபதி மைத்திரியின் இந்த முந்திரிப் பருப்பு விவகாரம் வைரலானதை அடுத்து, நான்கு வருடங்களுக்கு முன்னர் விமானமொன்றில் நடந்த இன்னொரு முந்திரிப் பருப்பு விவகாரமும் ஊடகங்களில் தூசு தட்டிப் பேசப்படுகிறது.

கொரியன் ஏர் விமானமொன்றில் 2014ஆம் ஆண்டு, அந்த விமான நிறுவன தலைமை செயலதிகாரியின் மகள் பயணித்தார்.

அப்போது அவருக்கு பரிமாறப்பட்ட முந்திரிப் பருப்பு தட்டில் வைக்கப்படாமல், பொட்டலத்தில் வைத்து பரிமாறப்பட்டதாக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

இதனால், விமானத்தை புறப்பட்ட இடத்திற்கே அந்தப் பெண் -மீண்டும் திரும்பச் செய்தார்.

கொரியன் ஏர் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான சோ யாங் ஹோவின் மகளான ஹெதர் சோ, பின்னர் – விமான பாதுகாப்பு சட்டத்தை மீறிய குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்டு பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்