ரவிக்கு எதிராக வழக்கு

🕔 September 14, 2018

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், பொய்யான தகவல்களை வழங்கினார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில், ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக  இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நிதியமைச்சராக ரவி கருணாநாயக்க பதவி வகித்த போது, மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கலில் மோசடிகள் இடம்பெற்றன.

இந்த மோசடியில் ரவி கருணாநாயக்கவும் தொடர்புபட்டிருந்தார் எனும் குற்றச்சாட்டு எழுந்தமையினை அடுத்து எழுந்த அழுத்தத்தின் காரணமாக, தனது அமைச்சுப் பதவியினை ரவி ராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்