குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மூன்றரை மணி நேரம், கோட்டா வாக்கு மூலம்

🕔 September 12, 2018

 டகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று புதன்கிழமை வாக்கு மூலமொன்றினை வழங்கினார்.

சுமார் மூன்றரை மணி நேரம் அவரிடமிருந்து வாக்கு மூலம் பெறப்பட்டதாக அறிய முடிகிறது.

இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய கோட்டா, வாக்கு மூலம் வழங்கிய பின்னர், அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கடந்த 17 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்கியிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்