சம்மாந்துறை உடங்கா கிராமத்தில் யானை அட்டகாசம்; 05 வீடுகள் பாதிப்பு

🕔 September 10, 2018

– யூ.எல்.எம். றியாஸ் –

ம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட உடங்கா 02ம்  கிராமத்துக்குள்  நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானையொனறு புகுந்து அழிவை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சுமார் 12.45 மணியளவில் இக்கிராமத்திற்குள் நுழைந்த காட்டு  யானையின்  அட்டகாசத்தினால்  05 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பெருமளவிலான சேனைப் பயிர்களும் நாசமடைந்துள்ளன.

யானைத் தாக்குதலுக்குள்ளான வீடுகளில் இருந்தவர்கள், ஆபத்துக்களின்றி தப்பியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஐ.எம். மன்சூர் சென்று பார்வை இட்டதுடன் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

வனஜீவராசிகள் திணைக்களத்துடன் தொடர்பு  கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், இக் கிராமத்தை யாணைத்தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்குகுத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்ட ஈட்ட பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதன்போது சம்மாந்துறை பிரதேச சபை  உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்