ஞானசார தேரர், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம்

🕔 September 6, 2018

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை மாற்றப்பட்டுள்ளார்.

ஞானசார தேரருக்கு 06 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் – ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சில வாரங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்பின்னர், அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையிலேயே, மீண்டும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு ஞானசார தேரர் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்