நாமலை விமர்சித்தவர்கள், அலறி மாளிகை ஆடம்பரத் திருமணம் தொடர்பில் மௌனம்: சானக குற்றச்சாட்டு

🕔 August 31, 2018

நாமல் ராஜபக்ஷவின் லம்போகினி பற்றி விமர்சித்தவர்கள் அலரி மாளிகையில் நடந்த ஆடம்பர திருமணம் தொடர்பில் மௌனமாக இருக்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“வரலாற்றில் முதலாவது திருமண வைபவம் அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை கோலகலமாக நடைபெற்றுள்ளது. கடந்த ஆட்சியின் போது, மக்கள் சேவைக்காக பயன்படுத்தப்பட்ட அலரிமாளிககை தற்போது திருமண வைபவத்துக்கான நடனமாடும் களியாட்ட விடுதியாக்கப்பட்டுள்ளது.

நாமலின்  லம்போகினி பற்றி விமர்சித்தவர்கள் அலரி மாளிகை ஆடம்பர திருமணம் தொடர்பில் மௌனமாக உள்ளனர்.

இந்த நாட்டில் நிரந்தர சமாதானத்தை உருவாக்கிய மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை கவிழ்க்க கடந்த காலங்களில் பல்வேறு போலி விமர்சனங்களை முன்வைத்திருந்தார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களிடம் லம்போகினி கார் உள்ளதாக கூறினார்கள், தங்க குதிரை உள்ளது என கூறினார்கள், விலையுயர்ந்த கடிகாரம், பாதணிகள் உள்ளதாக கூறினார்கள். இவை அனைத்தும் பொய்யான குற்றசாட்டுகள் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.

அப்போது, இது தொடர்பில் வாய் கிழிய விமர்சித்தவர்கள், தற்போது அலரி மாளிகையில் திருமண கழியாட்ட விழாக்கள் நடக்கையில், ஒன்றும் அறியாதவர்கள் போல இருக்கிறார்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்