சிகரட் விற்பனையை நாட்டிலுள்ள 100 நகரங்கள் புறக்கணிப்பு: சுகாதார அமைச்சு தகவல்

🕔 August 23, 2018

சிகரட் விற்பனையை நாட்டிலுள்ள 100 க்கும் அதிகமான நகரங்கள் புறக்கணித்தள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புகைத்தலால் ஏற்படகூடிய தீங்குகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கு, பொது சுகாதார உத்தியோகத்தர்கள் ஒன்றியம் நாடளாவிய ரீதியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தமையின் காரணமாகவே, கடை உரிமையாளர்களும் வியாபாரிகளும் சிகரட் விற்பனையை நிறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 22 நகரங்களும் மாத்தறையில் 17 நகரங்களும் குருநாகலில் 16 நகரங்களும் என, மொத்தமாக 107 நகரங்கள் சிகரட் விற்பனையைப் புறக்கணிக்கும் முயற்சியில் பங்கெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டில் நாட்டில் உள்ள 200 நகரங்கள் சிகரட் விற்பனையை புறக்கணிக்குமென்று தான் நம்புவதாக சுகாதார அமைசர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்