மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு, கோட்டா உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பு

🕔 August 22, 2018

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு ஆஜராகுமாறு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 04 பேருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஆராய அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவே இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

சஜின் வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா விமான சேவையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்ரசேன ஆகியோருக்கும் இவ்வாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் 29ஆம் திகதி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்