மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்

🕔 August 21, 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சந்ர ராஜபக்ஷ இன்று செவ்வாய்கிழமை காலமானார்.

இவர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தங்காலையில் இன்று மரணமடைந்துள்ளார்.

இறக்கும் போது இவருக்கு 70 வயதாகும். மஹிந்த ராஜபக்ஷவுக்கு இவர், இளைய சகோதராவார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுக அமைச்சரின் பிரத்தியேக செயலாளராக, காலம் சென்ற சந்ர ராஜபக்ஷ கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments