அமைச்சர் றிசாட் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையில் திருத்தம்

🕔 August 17, 2018

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை வெளியான டெய்லி மிரர், லங்கா தீப பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தொடர்பாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் ரி.டி.எஸ்.பி. பெரேரா திருத்தமொன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் ரிஷாட்டின் வாகனப் பாவனை தொடர்பாக, தரிந்து ஜெயவர்தன என்பவரால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விபரங்களைக் கோரியிருந்தார்.

இதற்கமைய வழங்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையின் கணிப்பு தவறானதெனவும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாவனையில் 03 வாகனங்கள் மாத்திரமே  இருப்பதாகவும் அமைச்சின் மேலதிகச் செயலாளர் வெளியிட்டுள்ள திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் றிசாட் பதியுதீன் 10 வாகனங்களைப் பயன்படுத்துவதாக, தான் குறிப்பிட்டிருந்ததாகவும், தவறுதலாக இந்தக் கணிப்பீடு செய்யப்பட்டு விட்டதாகவும், மேலதிக செயலாளர் பெரேரா, குறித்த பத்திரிக்கைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Comments