சம்மாந்துறை பிரதேச சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

🕔 August 14, 2018
– யூ.எல்.எம். றியாஸ் –

ம்மாந்துறை பிரதேச சபையில் கடைமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக வேலை செய்யும் 61 ஊழியர்களும் இருக்கத்தக்கதாக, புதிதாய் இப்பிரதேச சபைக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டமையைக் கண்டித்தும், ஐந்து வருடங்களுக்கு மேலாக, தற்காலிகமாக வேலை செத்துவருகின்ற சிற்றூழியர்கள், சுகாதார தொழிலாளிகள்,சாரதிகள் மற்றும் வேலைத் தொழிலாளிகளை நிரந்தர நியமனம் செய்யுமாறும் வலியுறுத்தியே இவ் ஆர்ப்படம்  இடம்பெற்றது.

பிரதேச சபையின் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்வர்கள், பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட்டிடம் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றியும் கையளித்தனர்.

Comments