இந்த ஆட்சியில்தான் அதிகளவு நீர்வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன: ஹக்கீம் தகவல்

🕔 August 14, 2018
டந்த காலங்களில் எந்த அரசாங்கமும் செய்யாத வகையில், இந்த ஆட்சியில் பாரியளவிலான குடிநீர் வழங்கல் திட்டங்களை அமுல்படுத்தி வருவதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

விளம்பரம் இல்லாமல் இந்த அபிவிருத்திகள் செய்யப்படுவதினால் பலருக்கும் இவை பற்றித் தெரியவருவதில்லை என்றும் அவர் கூறினார்.

குருநாகல் மாவட்டத்தில் நிகவரட்டிய தொகுதியில் நம்முவாவ, ஒட்டுக்குளம் மற்றும் கல்கமுவ தொகுதியில் ஜாகம மற்றும் ஹதிரவலான ஆகிய பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நேற்று திங்கட்கிழமை திறந்துவைத்த பின்னர் உரையாற்றும்போதே அமைச்சர் இதனை சொன்னார்.

“குழாய் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள முடியாத இடங்களில் இடைக்கால தீர்வாக சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் ஜனாதிபதியின் வழிகாட்டலின்கீழ் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

கடந்த ஆட்சியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆட்சியில் அபிவிருத்திகள் நடைபெறாதது போல சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த ஆட்சியில்தான் அதிகளவான நீர் வழங்கல் திட்டங்களை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.

இப்படியான வேலைத்திட்டங்களுக்கு எவ்வித விளம்பரங்களும் இல்லாமல் செய்வதினால் எவ்வளவு வேலை செய்கிறோம் என்று பலருக்கு தெரிவதில்லை” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்