தெ.கி.பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில் முதலாவது கலாநிதி: பெருமை சேர்த்தார் பாசில்

🕔 August 12, 2018

– முன்ஸிப் –

தென்கிழக்குப் பல்லைக்கழக அரசியல் துறைத் தலைவர் எம்.எம். பாசில், தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் இவர் அரசியல் விஞ்ஞானத்துறையில்தன்னுடைய கலாநிதிப் பட்டத்தை நிறைவு செய்துள்ளார்.

அந்த வகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில், முதலாவதாக கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டவர் எனும் பெருமையினையும் பாசில் பெற்றுக் கொள்கிறார்.

தனது இளமாணிப் பட்டப்படிப்பை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்ட பாசில், தன்னுடைய முதுமாணிப் பட்டத்தை ஜப்பானிலுள்ள மீஜி பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார்.

மருதமுனையைச் சொந்த இடமாகக் கொண்ட இவர்,  இள வயதிலேயே கல்வித்துறையில் பல்வேறு அடைவுகளைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments