பசிலுடன் இணைந்து ஹக்கீம் நிதி மோசடி: லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில், முறைப்பாடு செய்கிறார் சந்திரிக்கா

🕔 August 8, 2018

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தெரியவருகிறது.

கடந்த ஆட்சியின்போது, அத்தனகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் வழங்கல் திட்டத்தில், ரஊப் ஹக்கீம் மேற்கொண்ட மோசடி தொடர்பாகவே, சந்திரிக்கா இந்த முறைப்பாட்டினை செய்யவுள்ளார்.

குறித்த நீர் வழங்கல் திட்டத்துக்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும்  ரஊப் ஹக்கீம் ஆகியோர் இணைந்து 35 பில்லியன் ரூபாய் ஒருக்கீடு செய்து, நிர்மாணப் பணிகளை ஆரம்பித்ததாகவும், ஆனால் 18 பில்லியன் ரூபாய் மட்டுமே இதற்கு செலவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இதனை சந்திரிக்கா எதிர்த்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் சந்திரிக்கா முறையிட்ட போதிலும், ரஊப் ஹக்கீம் அந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்கு அனுமதித்தார் எனவும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்