ஞானசார தேரருக்கு, 06 வருட கடூழிய சிறைத்தண்டனை: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

🕔 August 8, 2018

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு 19 வருடங்களை 06 வருட காலத்தில் நிறைவு செய்யும் வகையிலான கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் 04 வழக்குகளில், ஞானசார தேரரை குற்றவாளியாக அடையாளம் கண்ட – மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்தத் தண்டனையை வழங்கி இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், மேற்படி தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக, ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து, ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய குற்றத்துக்காக, ஞானசார தேரருக்கு 06 மாதகடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தத் தண்டனைக்கு எதிராகவும், ஞானசார தேரர் மேன்முறையீடு செய்துள்ள நிலையிலேயே, தற்போது 06 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்