ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோட்டா மட்டுமே இருக்க முடியும்: கம்மன்பில

🕔 August 6, 2018

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்த எதிரணியின் சார்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறக்கப்பட வேண்டும் என்று, பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்; ஏதாவது குற்றங்களுடன் கோட்டாவை தொடர்புபடுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா என்பது தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதுரகத்தின் பிரிதிநிதிகளுக்கும், பேராசிரியர் மெக்ஸ்வல் பரணகமவுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கோட்டாபாயவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்திடம் அரச சார்பற்ற நிறுவனங்களின் சங்கம் விசாரித்ததாகவும் கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனைத்துக் கட்சிகளும் பயப்படுகின்றனவென்றால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அவர் மட்டுமே இருக்க முடியும் எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்